Vimarsagan Media

Home » Malaysia » முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது, ஆக. 27 மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய குற்றச்சாட்டு பதிவு .

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது, ஆக. 27 மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய குற்றச்சாட்டு பதிவு .

மலேசியாவின் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (MACC) சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 27 அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் படவுள்ளன.

மலேசியாவின் பகாங் மாநிலத்திலுள்ள பெரா (Bera) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் மீது, கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (Sessions Court) இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று அவரது வழக்கறிஞர் அமர் ஹம்சா அர்ஷாத் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 26 அன்று அவரைத் தொடர்பு கொண்டபோது, ​​”ஆம், அவர் மீது நாளை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்,” என்று அவர் கூறினார் நியூ ஸ்ரேயிட் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, முன்னாள் பிரதமருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் 7 அன்று ஒத்திவைத்திருந்தது.

அப்போது அமர்வு நீதிமன்ற நீதிபதி சுசானா ஹுசின் கூறியதாவது: “குற்றம் சாட்டப்பட்டவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், அரசுத் தரப்பு ஒப்புதலுடன் அவரது வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டும், குற்றச்சாட்டுகளை வாசித்தல் மற்றும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நீதிமன்ற நடவடிக்கையை ஆகஸ்ட் 27 அன்று காலை 9 மணிக்கு மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதிக்கிறது.”

ஆகஸ்ட் 6 அன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமையக த்தில் வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டபோதே இஸ்மாயில் சப்ரி உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்ததாக அமர் ஹம்சா குறிப்பிட்டார்.

Scroll to Top