இங்குள்ள ஒரு உயர்தர வணிக வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டு, கார்களைச் சேதப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாங் வாங்கி காவல் நிலையத்தின் பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் நுசுலான் முகமது டின் கூறுகையில், 34 வயதான அந்த வெளிநாட்டவர், வணிக வளாகத்தில் ஏழு கார்களைக் கீறியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, புதன்கிழமை (செப்டம்பர் 9) கைது செய்யப்பட்டார்.
“மேலதிக விசாரணைகளுக்காக அவர் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.”
“சேதம் அல்லது இழப்பை ஏற்படுத்தும் நாசவேலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 427-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்று அவர் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) தெரிவித்தார்.




