உயர் நீதிமன்ற நீதிபதி அலிஸ் லோக் யீ சிங் (Alice Loke Yee Ching), நேற்று மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்று, அதற்கான உறு திமொழியை ஏற்றுக்கொண்டார்.
அதேவேளையில், நீதித்துறை ஆணையர் எலன் யாப் சின் கைக் (Elaine Yap Chin Gaik), உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
லோக், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் டத்தோ ஸ்ரீ அபு பக்கர் ஜைஸ் (Datuk Seri Abu Bakar Jais) முன்னிலை யிலும், யாப், மலாயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டத்தோ ஸ்ரீ ஹாஷிம் ஹம்சா (Datuk Seri Hashim Hamzah) முன்னிலையிலும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்தப் பதவியேற்பு விழாவில் தலைமை நீதிபதி துன் வான் அகமது ஃபரிட் வான் சல்லே மற்றும் சபா-சரவாக் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டத்தோ அஸிசா நவாவி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பேராக் மாநிலத்தின் தைப்பிங் (Taiping) பகுதியைச் சேர்ந்த 64 வயதான லோக், இதற்கு முன் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் (Attorney General’s Chambers) சிவில் பிரிவின் தலைவராகப் பணியாற்றியவர். அவர் ஜூலை 10, 2020 அன்று உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரப் பிரிவின் (Special Powers Division) நீதிபதியாக, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்
தாக்கல் செய்திருந்த நீதித்துறை மறுஆய்வு மனுவை லோக் விசாரித்தார். சிறைத்தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் வகையிலான ஒரு கூடுதல் உத்தரவு (addendum order) தொடர்பான விவகாரமே அந்த மனுவின் மையப்பொருளாக இருந்தது.
இதற்கிடையில், பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த 53 வயதான யாப், ஆகஸ்ட் 28, 2024 அன்று உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்; பின்னர் நவம்பர் 3, 2025 அன்று உயர் நீதிமன்ற நீதிபதியாக உறுதிப்படுத்தப்பட்டார்.
நீதித்துறை ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் ‘எலன் யாப் லா ஆபீஸ் என்ற சட்ட நிறுவனத்தின் தனி உரிமையாளராகப் பணியாற்றினார். தற்போது அவர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் வணிகப் பிரிவில் (Commercial Division) பணியாற்றி வருகிறார்.




