Vimarsagan Media

Home » Malaysia » கழிவறையில் இருந்த இளைஞரின் காணொளி மற்றும் புகைப்படம்:- அரசு ஊழியர் ஒருவர கைது செய்யப்பட்டார்.

கழிவறையில் இருந்த இளைஞரின் காணொளி மற்றும் புகைப்படம்:- அரசு ஊழியர் ஒருவர கைது செய்யப்பட்டார்.

பஹாங்,மாரன் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் கழிவறையில் இருந்த இளைஞர் ஒருவரின் காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில், 39 வயதுடைய அரசு ஊழியர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

கழிவறையில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது காணொளியை எடுத்ததாகக் கூறி, பாதிக்கப்பட்ட 22 வயது இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக மாரன் காவல் துறைத் தலைவர் வோங் கிம் வாய் தெரிவித்தார்.

விசாரணையைத் தொடர்ந்து, அந்தப் பல்பொருள் அங்காடிக்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக ‘பெரித்தா ஹரியன்’

செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்ததைச் சந்தேக நபர் ஒப்புக்கொண்டதாக வோங் கூறினார். விசாரணையின் ஒரு பகுதியாக அவரிடமிருந்த கைபேசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விசாரணைக்கு உதவும் வகையில் அந்த நபர் பின்னர் மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டார். தண்டனைச் சட்டத்தின் (Penal Code) பிரிவு 509 மற்றும் 292-ன் கீழ், முறையே கண்ணியத்தைக் குலைத்தல் மற்றும் ஆபாசமான பொருட்களை வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டு களின் அடிப்படையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Scroll to Top