Vimarsagan Media

Home » World » இலங்கையில் முதியோர் இல்லத்தில் தீ: 11 பேர் உயிரிழப்பு 7 பேர் காயம்

இலங்கையில் முதியோர் இல்லத்தில் தீ: 11 பேர் உயிரிழப்பு 7 பேர் காயம்

இலங்கையில் முதியோர் இல்லத்தில் தீ பற்றியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயம் அடைந்து உள்ளனர்.இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லம் கொழும்பிலிருந்து தென்கிழக்கே 65 கி.மீ. தொலைவில் உள்ள அங்குருவடோட்டாவில் அமைந்துள்ளது.

இந்த முதியோர் இல்லத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் 7 பேர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Scroll to Top