மதியம் 1.00 மணி தொடக்கம்
ஜாலான் ஈப்போ செட்டியார் மண்டபம்
இந்த ஆண்டு முதல் அடுத்த ஓர் ஆண்டிற்கு நாடு தழுவிய அளவில் பல்வேறு சிறப்பான விழாக்களை நடத்தக் கண்ணதாசன் அறவாரியம் திட்டமிட்டுள்ளது. அதன் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடக்க விழாவாக இந்த ஆண்டு கண்ணதாசன் விழா மிகக் கோலாகலமாக *மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அவர்கள் தலைமையில்* நடைபெறவுள்ளது.
உலகளாவியப் புகழ்பெற்ற *இலக்கியப் பேச்சாளர்கள் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர்கள்* பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கண்ணதாசனின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற வுள்ளது.
இலக்கிய ஆர்வலர்களும், கவியரசின் இரசிகர்களும் திரளாக வருகை தந்து இந்த இலக்கிய அமுதத்தைப் பருகிட அன்போடு அழைக்கப் படுகின்றனர்




