Vimarsagan Media

Home » Malaysia » சீன நாட்டவரிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் பணம் பறிக்க முயன்றதாக உயர் அதிகாரி உட்பட 12 அதிகாரிகள் கைது

சீன நாட்டவரிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் பணம் பறிக்க முயன்றதாக உயர் அதிகாரி உட்பட 12 அதிகாரிகள் கைது

சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், உயர் அதிகாரிகள் உட்பட 12 மலேசியக் காவல் அதிகாரிகள் கைது செய்யப் பட்டுள்ளதாக ‘உத்துசான் மலேசியா’ ( செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலை யாவதற்காக அந்தச் சீன நாட்டவர் 5,60,000 ரிங்கிட் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங் களை மேற்கோள்காட்டி அந்த நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி, பாதிக்கப்பட்ட நபர் 1,40,000 அமெரிக்க டாலர் (5,72,000 ரிங்கிட்) தொகையைச் செலுத்திய பிறகு, டங் வாங்கி (Dang Wangi) மாவட்டக் காவல் தலைமையக த்தில் புகார் அளித்துள்ளார்.பின்னர் அவர் டங் வாங்கி மாவட்டக் காவல் தலைமையகத்திற்கு (IPD) வந்து புகார் அளித்தார்.

“அதனைத் தொடர்ந்து, துணை கண்காணிப்பாளர் (DSP), உதவி கண்காணிப்பாளர் (ASP) மற்றும் பிற பதவிகளை வகிப்பவர்கள் உட்பட 12 காவல் அதிகாரிகள் மற்றும் பணி யாளர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது,” என்று அந்த வட்டாரம் கூறியதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நபரிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் கோரியுள்ளனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட நபரால் 5,60,000 ரிங்கிட் மட்டுமே செலுத்த முடிந்தது; அதன்பிறகு அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தார்.

“இவ்வழக்குடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பணத்தின் ஒரு பகுதியையும் காவல்துறையினர் மீட்டனர்,” என்றும் அந்த வட்டாரம் மேலும் கூறியது. ‘உத்துசான் மலேசியா’ தொடர்பு கொண்டபோது, ​​டங் வாங்கி மாவட்டக் காவல் தலைவர் உதவி ஆணையர் சசாலீ ஆடம் (Sazalee Adam) இந்தக் கைது நடவடிக்கைகளை உறுதிப்படுத்தினார்

Scroll to Top