ஜூலை 27 அன்று ‘தெர்மினல் 1’-இல் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக,கேஎல்ஐஎ காவல் நிலையத் தலைவரும் உதவி ஆணையருமான ரவி முனுசாமி செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தோனேசியாவுக்கான அவரது விமானப் பயணம் ஐந்து மணி நேரம் தாமதமானதால், அந்நபர் ஆவேசமடை ந்தார்.
“அவர் பணியில் இருந்த விமான நிறுவன ஊழியர்களை நோக்கி அவதூறான வார்த்தைகளைப் பயன் படுத்தியதுடன், மிரட்டல் மற்றும் ஆத்திரமூட்டும் வகையிலும் பேசினார். நிலைமையைச் சீராக்க வந்த முனையப் பாதுகாப்புப் பணியாளர்கள், அந்த நபரை ‘தெர்மினல் 1’-இல் உள்ள குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
“இருப்பினும், அந்த நபர் தொடர்ந்து ஆவேசமாகவும் கண்ணியக்குறை வாகவும் நடந்துகொண்டதுடன், பணியில் இருந்த குடிவரவுத் துறை அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களையும் பின்பற்ற மறுத்தார்.
“இதையடுத்து, KLIA-வின் துணைப் போலீஸாரால் (auxiliary police) அவர் கைது செய்யப்பட்டு, மேல் விசாரணைக்காக KLIA போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார். 25 வயதான அந்த நபர் நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.




